» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நமீபியா வரலாற்றில் முதல் முறை: அதிபராக பெண் தேர்வு!
புதன் 4, டிசம்பர் 2024 5:02:17 PM (IST)

நமீபியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நெடும்போ நந்தி தைத்வா, அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்னும் பெருமை பெற்றுள்ளார்.
நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி (SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் நெடும்போ நந்தி நடைட்வா 57.3% வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் நமீபியாவின் அதிபராக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல் ஆப்பிரிக்க கண்டத்தின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதே சமயம், தேர்தல் முடிவுகளுக்கு அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் உள்ள வேலையின்மை விகிதத்தை குறைக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நெடும்போ நந்தி தைத்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் : ரஷிய முன்னாள் அதிபர்
திங்கள் 23, ஜூன் 2025 5:51:04 PM (IST)

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான உரிமை மீறல்: வட கொரியா கண்டனம்!
திங்கள் 23, ஜூன் 2025 11:32:50 AM (IST)

தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு தரும் டெலிகிராம் சி.இ.ஓ.,!
சனி 21, ஜூன் 2025 11:43:04 AM (IST)

ஈரானைத் தாக்கினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:39:08 PM (IST)

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!
வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்!
வியாழன் 19, ஜூன் 2025 5:49:59 PM (IST)
