» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடாவில் இந்து கோவில் மீது தீவிரவாத தாக்குதல் : ஜெய்சங்கர் வருத்தம்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 5:38:17 PM (IST)

கனடாவில் இந்து கோவில் மற்றும் பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பெராவில், ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஜெய்சங்கர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்
கனடா ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கவலை அளிக்கிறது. கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் தீவிரவாத சக்திகளுக்கு எப்படி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
இது இந்திய சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கூறினார்.
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறைஅமைச்சர் பென்னி வோங் கூறியதாவது: அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்தலாம். மக்கள் தங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்வதற்கு உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)
