» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்பட பல பகுதிகளில் ரஷியா தாக்குதல்: 36 பேர் பலி

செவ்வாய் 9, ஜூலை 2024 12:28:21 PM (IST)உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory