» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 7, ஜூன் 2024 11:26:05 AM (IST)
இலங்கையில் கொலையாளிக்கு முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இலங்கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு சுற்றுலா வந்திருந்த 19 வயது ஸ்வீடன் பெண்ணை ஜெயமஹா அடித்துக் கொலை செய்தாா். கொல்லப்பட்ட பெண்ணின் மண்டையொடு 64 இடங்களில் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் ஜெயமஹா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மேல்முறையீட்டில் மரம தண்டைனையும் விதிக்கப்பட்டது.எனினும், ஜெயமஹாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன பொதுமன்னிப்பு வழங்கினாா். அதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது.
மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் (இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக ஸ்ரீசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையிலேயே அவா் இதுவரை பாதியைத்தான் செலுத்தியுள்ளாா் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)


.gif)