» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வரலாற்றில் முதல்முறை: ஈரானின் சாபஹர் துறைமுகம் இந்திய அரசிடம் ஒப்படைப்பு
செவ்வாய் 14, மே 2024 5:26:48 PM (IST)

ஈரானின் சாபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் சாபஹர் என்ற இடத்தில், ஷாஹித் பெஹெஷ்டி மற்றும் ஷாஹித் கலந்தரி என்ற இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இதில், ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தில் நம் இந்திய அரசு முதலீடுகளை செய்துள்ளது. இதன் வாயிலாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த துறைமுகத்தின் முதல்கட்ட பணிகள் முடிவடைந்து, 2017, டிசம்பரில் திறக்கப்பட்டது.
இந்த துறைமுகத்தின் வழியே, இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு முதல்முறையாக கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.பின், 2018, டிசம்பரில், ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் நிர்வாக பொறுப்பு, மத்திய அரசுக்கு சொந்தமான, 'இந்தியா போர்ட் குளோபல் லிமிடெட்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.
தற்போது, ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நீண்ட கால ஒப்பந்தம், இந்தியா - ஈரான் இடையே கையெழுத்தாகி உள்ளது.ஈரான் சென்றுள்ள நம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனவால், இந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டார். இந்த தகவலை, நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று உறுதி செய்தார்.
சாபஹர் துறைமுகம், இந்தியா - ஈரான் நாடுகளின் வர்த்தக உறவில் முக்கிய பங்காற்றுகிறது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை சமாளிக்க ஈரானுக்கு பேருதவியாக உள்ளது.மேலும், சீனாவின் உதவியுடன் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தின் உதவியின்றி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்தை இந்தியா மேற்கொள்ள உதவி செய்கிறது. வரலாற்றில் முதல்முறையாக, வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
