» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைச் சமாளிக்க எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, 321 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, 335 ரூபாய்க்கு (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகப் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பின்வரும் அவசர கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி: நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு மூடப்படும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் சலுகை 50% ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from Home) உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும். தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்குத் தாய்லாந்து வைத்த செக்: விசா விலக்கு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்
சனி 23, மே 2026 5:50:24 PM (IST)

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஹம்சா புர்ஹான் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!
சனி 23, மே 2026 10:51:47 AM (IST)

ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத் தான் நெதன்யாகு செய்வார் - ட்ரம்ப் பேட்டி!
வியாழன் 21, மே 2026 3:47:10 PM (IST)

இந்தியா - இத்தாலி உறவில் புதிய சகாப்தம்: மோடி - ஜார்ஜியா மெலோனி கூட்டு அறிக்கை!
புதன் 20, மே 2026 4:52:04 PM (IST)

நார்வே பெண் நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்றார் பிரதமர் மோடி! – ராகுல் காந்தி சாடல்!
செவ்வாய் 19, மே 2026 3:39:00 PM (IST)

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)


