» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கச்சத்தீவு குறித்து இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை: இலங்கை அமைச்சர்
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:02:38 AM (IST)
கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த சூழலில், கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
 "இலங்கையை பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியா- இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவ்வாறு இந்திய அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதிலளிக்கும்." என்றார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)


.gif)