» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)
மேற்குவங்கத்தில் பிரபல கோவில் அருகே இயங்கி வந்த ஹோட்டலில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் புகழ்பெற்ற தாராபீத் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அப்பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவது வழக்கம். இந்நிலையில், தாராபீத் கோவில் அருகே செயல்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஹோட்டலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் தீ பற்றியதால், அங்குத் தங்கியிருந்த பக்தர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இத்தீ விபத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், தீவிரமாகப் போராடிப் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)


