» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!

சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை மட்டுமே திறந்துவிடும் கர்நாடகா, ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து வந்தது.

இந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் திறக்க அடம்பிடித்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த நல்ல மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தமிழகத்தின் உரியப் பங்கை வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது கண்டனத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்கவே, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான கர்நாடக நீர்வளத்துறை அவசர அவசரமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory