» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹைதராபாத் சாலைக்கு 'டொனால்டு டிரம்ப்' பெயர்: தெலுங்கானா அரசுக்கு அமெரிக்க அதிபர் நன்றி!
சனி 27, ஜூன் 2026 11:14:48 AM (IST)

இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள முக்கியச் சாலை ஒன்றிற்குத் தனது பெயர் சூட்டியுள்ள தெலுங்கானா அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் உள்ளிட்ட உலகின் முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கியச் சாலைக்கு 'டொனால்டு டிரம்ப் சாலை' என்று தெலுங்கானா அரசு பெயர் சூட்டியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வப் பெயர் சூட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியொ கொர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிலையில், இந்தியச் சாலைக்குத் தனது பெயர் வைக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'டிரூத்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
"இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த உயரிய பெருமையைப் பெறும் முதல் அமெரிக்க அதிபர் நானே என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஹைதராபாத் சாலைக்கு எனது பெயரைச் சூட்டி கௌரவித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)


