» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)

அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை மற்றும் நன்கொடை மோசடி புகாரில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து, அதுகுறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக்குழுவை (SIT) உ.பி. அரசு அமைத்தது. இந்தச் சிறப்பு விசாரணைக்குழு தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

வங்கி மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள இக்குழு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முதற்கட்டமாக 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "அயோத்தி என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் சனாதன தர்மத்தின் அடையாளமாகும். அதன் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை அரசு வெளிக்கொண்டு வரும். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் தலையிடுபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இதில் யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory