» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஞாயிறு 10, மே 2026 8:48:44 PM (IST)
தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவர்கள் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது நாட்டின் பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)

வினாத்தாள் கசிவு எதிரொலி: நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 4:37:51 PM (IST)

புதிய ஊரக வேலை சட்டம் ஜூலை 1 முதல் அமல் : மத்திய அரசு அறிவிப்பு - காங்கிரஸ் விமா்சனம்!
செவ்வாய் 12, மே 2026 10:48:05 AM (IST)
தங்கம் வாங்காதீர்கள் என்பது அறிவுரை அல்ல, தோல்வியின் சான்று: பிரதமர் மீது ராகுல் சாடல்!
திங்கள் 11, மே 2026 4:39:29 PM (IST)

எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!
திங்கள் 11, மே 2026 11:00:45 AM (IST)

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா: கேரள திரையரங்குகளில் கண்டுகளித்த ரசிகர்கள்
திங்கள் 11, மே 2026 10:58:21 AM (IST)


