» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டி.வி. பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்திக்கு கத்திக்குத்து: மும்பை முதியவரின் வெறிச்செயல்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:11:48 AM (IST)
மும்பை அருகே டி.வி. பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த முதியவர் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைச் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை அடுத்துள்ள தானே, ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் முகமது தாரிக் கான் (58). இவரது வீட்டில் உள்ளவர்கள் டி.வி. பார்ப்பதை இவர் நீண்டகாலமாக எதிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.
சம்பவத்தன்று இரவு, முகமது தாரிக் கானின் பேத்திக்குப் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழா முடிந்த பின் அனைவரும் உறங்கச் சென்ற தருணத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவர் டி.வி.யை ஆன் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமது தாரிக் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத முகமது தாரிக் கான், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது மனைவியைச் சரமாரியாகக் குத்தினார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற அவரது மகள் மற்றும் பேத்தியையும் அவர் விடாமல் கத்தியால் குத்தினார்.
இந்தக் கத்திக்குத்தில் படுகாயமடைந்த மூன்று பேரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து முகமது தாரிக் கானின் மகள் அளித்த புகாரின் பேரில், ரபோடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது தாரிக் கானைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சாதாரண டி.வி. பார்க்கும் பிரச்சனை, ஒரு குடும்பத்தையே மருத்துவமனையில் சேர்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)


