» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)

ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்புப் பெட்டிகளில் பயணிப்பதற்கு, தேசிய அளவிலான தனித்துவமான அடையாள அட்டை (UDID) போதுமானது என ரயில்வே வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனிச் சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டணச் சலுகை 'பாஸ்' வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தப் பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுப் பெட்டிகளிலேயே பயணித்து வந்தனர்.

தற்போதுள்ள புதிய மாற்றத்தின்படி தேசிய மாற்றுத்திறனாளி நலத்துறை வழங்கிய தனித்துவமான அடையாள அட்டை (UDID) வைத்திருக்கும் அனைவரும் இனி ரயிலின் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்கலாம். ரயில்வேயின் கட்டணச் சலுகை பாஸ் இல்லாத மாற்றுத்திறனாளிகள், சாதாரணப் பயணச் சீட்டு பெற்றுக்கொண்டு, தங்களது யு.டி.ஐ.டி அட்டையைக் காண்பித்துச் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்கத் தடையுமில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தப் பெட்டிகளில் அனுமதியின்றிப் பயணிக்கும் இதர பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ரயில்வே வாரியத்தின் இந்த முன்னெடுப்பு, சலுகை பாஸ் பெறுவதில் சிக்கல் நீடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory