» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை வருகிற 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். ரயில் 8.15 மணிக்கு சேலம், 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவைக்கு வரும்.
இதேபோல எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும். 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம் வழியாக ரயில் பெங்களூரு செல்லும்.
இந்த ரயிலின் தொடக்க நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் வருகிற 8-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் புதிய வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)

அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)


.gif)