» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு

செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)



ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் ஹரியானா டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவில் காவல்பயிற்சி மைய ஐஜி பூரன்குமார்(52) அக்.7ம் தேதி தமது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தை, டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா ஆகியோருக்கு அவர் எழுதி இருந்தார்.

கடிதத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தம்மை ஜாதி ரீதியாக பாகுபாடு செய்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இவரின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று இறந்துபோன பூரன்குமார் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமார், சண்டிகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சண்டிகர் ஐஜி புஷ்பேந்திரகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவின் கையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது முக்கிய நடவடிக்கையாக, டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.  முன்னதாக, குற்றவாளிகள் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை உறுதி என்று முதல்வர் நயான் சைனி தெரிவித்து இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory