» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்

சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)



பெண்கள் பணியாற்ற விரும்பும் மாநிலங்களில், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச கல்வி மற்றும் திறன் தொடர்பான ‘வீபாக்ஸ்’ அமைப்பு ‘இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் - 2025’ஐ வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு தேர்வில் 45.6 சதவீத பெண்கள் வேலைக்கு தகுதியானவர்களாக இருந்துள்ளனர். நடப்பாண்டில் இது 47.53 சதவீதமாக உள்ளது. இது வேலைவாய்ப்புகளில் உள்ள முன்னேற்றம் மற்றும் சவால்களுக்கு பெண்கள் தயாராவதையே காட்டுகிறது.

அதேநேரத்தில் இந்த மாநிலத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பெண்கள் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றில் முக்கியமாக 10 மாநிலங்களை அவர்கள் தேர்வு செய்கின்றனர். அதில் ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேற்கூறிய மாநிலங்களில் சமூக, பொருளாதார மாற்றங்களும் காரணங்களாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory