» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆப்கான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்களுக்கு தடை: காங்கிரஸ் கண்டனம்!

சனி 11, அக்டோபர் 2025 12:42:04 PM (IST)



ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வருவது தெரிந்ததே.

அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கி வைக்கும் கொள்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மண்ணில் தாலிபான்களை திருப்திப்படுத்த பெண் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்து பெண் ஒடுக்குமுறைக்கு மத்திய அரசு துணை போகிறதா என்ற கேள்வி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார். 

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் வெளியிட்ட பதிவில், "ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமீர் கான் முத்தாகி உரையாற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தனிப்பட்ட பார்வையில், ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை அல்லது அழைக்கப்படாததை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பெண் பத்திரிகையாளர்களை விலக்க தாலிபான் அமைச்சரை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது." என்று விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory