» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது: நிர்மலா சீதாராமன்
ஞாயிறு 5, அக்டோபர் 2025 9:48:31 AM (IST)
இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய பிரச்சினைகள் எல்லாம் தீவிரம் அடைந்து வருகின்றன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் எல்லாம் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். உள்நாட்டு வர்த்தக நிலவரம் வலுவாக உள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மையால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். இந்தியாவின் பொருளாதாரம் எதையும் தாங்கும் திறன் படைத்தது. அது தொடர்ந்து நிலையாக வளரும். உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல், நிலையான மற்றும் எதிர்பாராத ஒத்துழைப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும். நமது விதியை தீர்மானிக்கும் முடிவுகள் உலகில் எங்கோ எடுக்கப்படும்போது நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க முடியாது. அதில் நாம் தீவிர பங்காற்றி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)


