» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை

சனி 5, ஏப்ரல் 2025 5:32:43 PM (IST)

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று கொழும்பில் கூட்டாக செய்தியாளர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை அதிபருடன் பேசினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, அதன் நிறைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறுகையில், இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலகட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கரோனா காலகட்டங்களில் என இலங்கைக்கு இந்தியா உதவியிருக்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதரா நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றதை இங்கே நினைவுகூர்கிறேன்.

இலங்கை அதிபராக அநுர குமார பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குத்தான் வருகை தந்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. இந்தியா - இலங்கை இடையே வரலாற்று ரீதியாக பிணைப்பும் உள்ளது. தற்போது இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory