» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

சனி 5, ஏப்ரல் 2025 5:13:53 PM (IST)

தமிழ்நாட்டில் 2024ல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக  விடுவித்தது. 

2024ம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், பிகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரத்து 280 கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. 

ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.522 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 33 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு 588 கோடியே 73 லட்சம் ரூபாயும், இமாச்சல பிரதேசத்திற்கு 136 கோடியே 22 லட்சம் ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

2024-25 நிதியாண்டில் இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் 20,264.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory