» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜார்கண்டில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து : ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் பலி!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:42:16 PM (IST)

ஜார்கண்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி மோதிய சிக்கியதில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா ரயில்வே லைனில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி வெளியான தகவலின்படி, நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலானது, பார்ஹத் எம்.டி. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது. 2 ரயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் கூறப்படுகிறது. 

இதில் சரக்கு ரயில்களில் ஒன்றில் தீப்பிடித்து கொண்டது. இதனால் மீட்பு பணி அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. விபத்தில், 5 ரயில்வே ஊழியர்கள் வரை காயமடைந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory