» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திரப் பிரதேசம் முழுவதும் வெப்ப அலை வீசும் : பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:13:38 PM (IST)

ஆந்திரப் பிரதேசம் முழுவதும் இன்று வெப்ப அலை வீசும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்திவரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று 26 மண்டலங்களில் வெப்பம் கொளுத்தும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

26 மண்டலங்களில் விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவற்டடங்களில் தலா ஆறு மண்டலங்களும், அல்லூரி சீதாராமராஜுவில் 3 மண்டலங்களும், கிழக்கு கோதாவரியில் ஒன்று, பார்வதிபுரம் மன்யத்தில் 10 மண்டலங்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார்.

நந்தியாலா மாவட்டத்தில் கோஸ்பாடுகவில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதைத் தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள கம்மரசேடுவில் 40.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory