» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் : தன்னைத் தானே பெல்ட்டால் அடித்து கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி!

செவ்வாய் 7, ஜனவரி 2025 11:28:50 AM (IST)



குஜராத்தில் பா.ஜ.க.வின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி ஆம் ஆத்மி நிர்வாகி தன்னைத் தானே பெல்டால் அடித்துக் கொண்டார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சவுக்கால் அடித்து கொண்டார். அதே போன்று , குஜராத்தில் சூரத் நகரில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியை சேர்ந்த தேசிய இணை செயலாளரான கோபால் இத்தாலியா என்பவர் திடீரென இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டை கழற்றி தனக்குத்தானே அடித்து கொண்டார்.

அப்போது சுற்றியிருந்தவர்கள் ஓடி சென்று அவரை தடுக்க முயன்றனர். மேடையில் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியை குற்றம் சாட்டினார். பா.ஜ.க. தலைவர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்த முயன்றார் என கூறி பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி கூறிய அவர், பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகளாக உள்ள தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் மக்களுக்கு நீதி கிடைப்பது கடினம் என்றாகி விட்டது. பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் நீதி இல்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியபடியே பெல்ட்டால் அவர் அடித்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், குஜராத் பல சம்பவங்களை பார்த்து விட்டது.

மோர்பி பாலம் இடிந்து விழுந்தது, வதோதராவில் படகு விபத்து, பல்வேறு கள்ளச்சாராய சோகங்கள், தீ விபத்துகள் மற்றும் அரசு பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிவு என பல விசயங்கள் நடந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய என்னால் முடியவில்லை என பெல்ட்டை கொண்டு அடிப்பதற்கு முன் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory