» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திமுக எதிர்க்கும் : கனிமொழி எம்.பி. பேட்டி!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 5:07:58 PM (IST)

"ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், திமுக உறுதியாக எதிர்க்கும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை, மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது.இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதவிற்கு ஆரம்ப நிலையிலயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மசோதா வலுவிழக்கச் செய்யும் . ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் செலவினம் குறையும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திமுகவும், திமுக தலைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், திமுகவின் எதிர்ப்பு உறுதியானது. என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

DMK IS FOOL TO PEOPLEDec 18, 2024 - 06:33:07 PM | Posted IP 162.1*****

IS A DRAMA SHOW , FAMILIES ARE ACTORS AND ACTRESS. PEOPLES ARE WATCHERS

ஒரே தேர்தல்Dec 18, 2024 - 12:24:52 PM | Posted IP 172.7*****

ALREADY YOUR FATHER SUPPORTED THEN WHY??????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory