» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 12:57:20 PM (IST)



நாடாளுமன்ற மக்களவையில்  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்  ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை கொண்டவரை மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. இதன்படி, ’ஒரே நாடு; ஒரே தோ்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை (டிச. 12) ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழிவகுக்கும்.

யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் இரண்டாவது மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது. மேலும்,மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory