» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜனவரி 1 முதல் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு : காவல்துறை எச்சரிக்கை!
செவ்வாய் 17, டிசம்பர் 2024 11:26:55 AM (IST)
மத்தியப் பிரதேசத்தில் ஜனவரி 1 முதல் பிச்சை போடுபவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தூர். நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது இந்தூர். இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரசாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.
வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
மக்கள் கருத்து
மக்கள்Dec 17, 2024 - 12:46:37 PM | Posted IP 172.7*****
என்ன கொடுமை சார் இது? பிச்சைக்காரர்களை தான் தூக்கி உள்ளே போடணும், அப்பாவி மக்களையா எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்களா ? யாரு அந்த அரை குறை முட்டாள்??
அப்போDec 17, 2024 - 12:47:30 PM | Posted IP 172.7*****