» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமியை கற்பழித்துக் கொலை செய்தவருக்கு தூக்கு: 61-வது நாளில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சனி 14, டிசம்பர் 2024 12:45:07 PM (IST)

மேற்கு வங்கத்தில் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்தவருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பராக்காவை சேர்ந்த சிறுமி ஒருவரை அப்பகுதியை சேர்ந்த தினபந்து ஹல்தர் என்பவர் பூ தருவதாக கூறி கடத்திச்சென்றார். பின்னர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த ஹல்தர், அந்த பிணத்துடனும் உறவு கொண்டார். இந்த கொடூர குற்றத்துக்கு சுபோஜித் என்பவர் உதவியாக இருந்துள்ளார்.

மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். பின்னர் ஜாங்கிப்பூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையும் விரைவாக நடந்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக 21-வது நாளிலேயே போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வேகமாக நடந்த இந்த விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு அளித்தார். 

அதில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தினபந்து ஹல்தர் குற்றவாளி என அறிவித்தார். மேலும் சுபோஜித் உதவியாக இருந்ததாக உறுதி செய்தார். அவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த தினபந்து ஹல்தருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சுபோஜித்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மம்தா பானர்ஜி வரவேற்பு

இதன்மூலம் இந்த வழக்கில் 61-வது நாளிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  கற்பழிப்பு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்று உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நான் இதை முன்பே சொன்னேன் மீண்டும் சொல்கிறேன், ஒவ்வொரு கற்பழிப்பு குற்றவாளியும் மரண தண்டனைக்கு தகுதியுடையவர். ஒரு சமூகமாக இந்த சமூக இழிவை நாம் வேரறுக்க வேண்டும். இந்த சம்பவங்களில் விரைவான விசாரணைகள் மற்றும் தண்டனைகள் ஒரு சக்திவாய்ந்த தடுப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory