» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

திங்கள் 9, டிசம்பர் 2024 5:15:47 PM (IST)



கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

ஜெய்ப்பூரில் ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், "தொழில்நுட்பம் மற்றும் தரவு [Information] சார்ந்த நூற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா உலகுக்கு காட்டுகிறது. இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

எங்கள் அரசு வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது. இந்தியாவின் யு.பி.ஐ. டி.பி.டி, திட்டம் மற்றும் இது போன்ற பல பல தரவுகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வலிமையை காட்டுகின்றன. இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்களானது. அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு செல்கிறார் மோடி. அங்கு அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) மூலம் பீமா சகி யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்த கட்டமாக 50,000 பெண்களும் எல்.ஐ.சி. முகவா்களாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.

18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும். முகவா்கள் அதி கபட்சமாக ரூ.21,000-வரை மாத வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory