» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் யுக்திகளுக்கு அரசியல் கட்சிகளிடம் ரூ.100 கோடி வாங்கினேன்: பிரசாந்த் கிஷோர் தகவல்!
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:25:31 AM (IST)
தேர்தல் ஆலோசனை வழங்க அரசியல் கட்சிகளிடம் ரூ.100 கோடி வாங்கினேன் என்று பிரபல அரசியல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த கட்சிகளையும் வெற்றி பெறவைத்துள்ளார். அதற்காக அவர் பெறும் கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு: ஆரம்பத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பயணித்து வந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஜன சுராஜ் (மக்கள் நல்லாட்சி) என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
பீகாரில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
பெலகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள உங்களுக்கு (பிரசாந்த் கிஷோர்) நிதி எப்படி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா. நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து கட்டணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக பெற்று இருக்கிறேன். இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது.
எனவே எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக (ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம்) வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார். பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
