» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

9 ஆம் வகுப்பு ஃபெயிலானவர் வளர்ச்சிப் பாதை காட்டுவாரா? பிரசாந்த் கிஷோர் விமர்சனம்!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:44:27 AM (IST)

9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம் என்று தேஜஸ்வி யாதவை பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.
 
தேஜஸ்வி யதாவுக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory