» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: இந்தூர் வாலிபர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:49:58 PM (IST)
உலகக்கோப்பை தொடரில் விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நடப்பு மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நகரங்களில் உள்ள மைதானங்களில் நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த அணி வீராங்கனைகள் இந்தியா வந்திருந்து இந்த தொடரில் ஆடி வருகின்றனர்.
தாலியா மெஹ்ராத் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெகுவிமரிசையாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் நேற்று மோதியது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அந்த அணி கடந்த சில நாட்களாகவே அங்கு முகாமிட்டது. அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னனி வீராங்கனைகள் 2 பேர் ஓட்டலில் இருந்து வெளியேறி அருகே உள்ள தேநீர் கடைக்கு காபி குடிக்க சென்றனர். அவர்கள் 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது வீராங்கனைகளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் மறித்து கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கூச்சலிட்டு சாலையில் சென்றவர்களை உதவிக்கு அழைத்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தங்களுடைய அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி பாதுகாப்பு மானேஜர் டேனி சிம்மன்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சோதித்தனர்.
பின்னர் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை பாலியல் ரீதியாக சீண்டிய இந்தூரை சேர்ந்த ஆக்கில் கான் (30) என்பவரை உடடினயாக கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக விசாரணையின்போது போலீஸ் நிலைய கழிவறையில் ஆக்கில் கான் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு ஆக்கில் கானுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஹாரில் ஊடுருவல்காரர்களை எங்கள் அரசு வெளியேற்றும்: அமித் ஷா பிரச்சாரம்
சனி 25, அக்டோபர் 2025 5:38:13 PM (IST)

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)


.gif)