» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரேபரேலியா? வயநாடா? எம்.பி.,யாக நீடிப்பதில் குழப்பம் உள்ளது - ராகுல் காந்தி கருத்து
புதன் 12, ஜூன் 2024 5:49:24 PM (IST)
"வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது" என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று (ஜூன் 11) ரேபரேலி சென்ற ராகுல் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இன்று கேரள வந்த ராகுல், மலப்புரம் பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்தும், இந்திய மக்களுக்கும் பிரதமர் உத்தரவிட முடியாது என்பதை கேரளா, உ.பி., உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எடுத்து காட்டி உள்ளன.அரசியல்சாசனம் எங்களது குரல். அதனை தொடாதீர்கள் எனவும் பிரதமரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர், அரசியல் சாசனத்தை கிழிப்போம் என பா.ஜ., வினர் பிரசாரம் செய்னர். ஆனால் தேர்தலுக்கு பின் அரசியல் சாசனத்தை பிரதமர் வணங்கினார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நூலிலையில் வெற்றி பெற்றார். அங்கு அவர் தோற்கடிக்கப்பட்டு இருப்பார். அயோத்தியில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
பிறகு வயநாட்டில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவே, 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டது. அடக்கத்தால், ஆணவம் தோற்கடிக்கப்பட்டது. வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.
மக்கள் கருத்து
நொந்த சாமிJun 13, 2024 - 07:17:28 AM | Posted IP 172.7*****
ரோமாபலி , இத்தாலி 😁😁😁
கந்தசாமிJun 12, 2024 - 07:33:19 PM | Posted IP 162.1*****
ரேபரேலி தொகுதியை ராஜினாமா செய்து விட்டு அங்கு பிரியங்காவை நிற்க வைக்க வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)

பனிக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென் இந்தியாவில் நடத்தலாம்: சசிதரூர் யோசனை
வியாழன் 18, டிசம்பர் 2025 3:46:32 PM (IST)

மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி!
புதன் 17, டிசம்பர் 2025 4:39:23 PM (IST)

மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:28:50 PM (IST)

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:46:07 PM (IST)


.gif)
ஆனந்த்Jun 13, 2024 - 02:33:26 PM | Posted IP 172.7*****