» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாமியாரை 95 முறை கத்தியால் குத்திக் கொலை இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!
புதன் 12, ஜூன் 2024 5:34:51 PM (IST)
மத்தியப் பிரதேசத்தில் மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரோஜ் கோல் என்பவரை, 24 வயது மருமகள் காஞ்சன் 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2022ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோது மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் சரமாரியாக மாமியாரை குத்தியுள்ளார். அவர் மகன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து கைது காஞ்சன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி காஞ்சனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார். ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
