» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பரபரப்பு பேட்டி

திங்கள் 10, ஜூன் 2024 12:08:42 PM (IST)

மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18 இடங்களிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா தலா ஒரு தொகுதியில் வென்றன.

திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே. முரளீதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கேரளாவின் முதல் பா.ஜனதா எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என இன்று கூறியுள்ளார். 

மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி கூறியதாவது:- நான் எம்.பியாகவே பணி செய்ய விரும்புகிறேன். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறி வந்தேன். ஆனால் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டேன். எனக்கு அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை. எனவே, என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory