» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

சனி 1, ஜூன் 2024 12:38:18 PM (IST)



மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்று வருகின்றது.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கம் 28.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மக்களவைக்கான இறுதிக்கட்டத் தோ்தல் இன்று நிறைவடைந்ததும், மாலை 6.30 மணிக்கு மேல் வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிட தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory