» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது
சனி 18, மே 2024 5:49:36 PM (IST)
சுவாதி மாலிவால் எம்பி தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் பகுதிக்கு உட்பட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையில் மாலிவால் பேசினார் என்று தெரிவித்து உள்ளார்.
முதல்-மந்திரியிடம், சந்திப்பதற்கான முன்அனுமதியை பெற்று வரும்படி மாலிவாலிடம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டார். முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார் என்றும் ஒழுங்குமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த புகாரில், அவருடைய நோக்கங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளன. மதிப்பு வாய்ந்த முதல்-மந்திரிக்கு எதிராக, தீங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது செயல் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவுக்கு எதிராக மாலிவால் மிரட்டல் விடுத்ததுடன், நிச்சயம் விளைவுகளை நீ சந்திக்கும் வகையில் செய்து விடுவேன். ஆயுசுக்கும் சிறையில் கிடந்து துன்பப்படும்படி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இது தேர்தல் நேரம். அதனால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு இருக்க கூடும். பா.ஜ.க.வினருடனான அவருடைய தொலைபேசி பதிவுகள், உரையாடல்கள் மற்றும் சாட்டிங்குகளை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றும் புகார் தெரிவிக்கின்றது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கும் சாத்தியம் உள்ளது என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதில், கெஜ்ரிவாலின் வீட்டில் பிபவ் குமார் இருக்கிறார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
