» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து: வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு!
திங்கள் 12, பிப்ரவரி 2024 4:47:42 PM (IST)

சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் சென்ற கார், சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடந்த எட்டு நாள்களாக, வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45) கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹிமாசல பிரதேசத்துக்கு தனது நண்பா் கோபிநாத் என்பவருடன் சென்றாா். பிப்.4-ஆம் தேதி, ஹிமாசல மாநிலத்தில் உள்ள கஷாங் நாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காா் ஓட்டுநா் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஆனால் வெற்றி துரைசாமியைக் கண்டறிய முடியவில்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்த கறை, திசுக்களை சேகரித்த போலீஸாா், அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, மரபணு முடிவுகள் ஹிமாசல பிரதேசத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிவித்தன. இந்நிலையில்தான், வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)
