தூத்துக்குடியில் ஆயுத பூஜை பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் நகரின் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்காகப் பூக்கள், பழங்கள், அவல், பொரி, வாழைகுலை மற்றும் பூஜை உபகரணங்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் கடைகளில் பொருட்களைக் குவித்து விற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அனைத்துப் பகுதிகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.