சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 29) முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிப் பேசியதாவது: "மக்களுக்கு என்ன தேவையோ அதற்குத்தான் அமைச்சர்கள் அனைவரும் முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ப அமைச்சர்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கான சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். "மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றித் தருவதில் அமைச்சர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

