தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலையைச் சேர்ந்தவர் ராசு. இவரது மகன் அய்யனார்பாண்டி (32). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதற்காகத் தூத்துக்குடி சந்திர பேரி கந்தசாமி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் வீடுகளில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு இயற்கை உபாதைக்காகத் தான் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.