Browse content
ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேச பேச்சு:77 நாட்டுத் தலைவர்கள் வெளிநடப்பு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா. சபையில் உரையாற்ற மேடைக்கு வந்த உடனடியாக, 77 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் அவரது உரையைக் புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
இமயமலையைப் பாதுகாக்க இந்தியா - சீனா கூட்டு செயல்திட்டம்: ஐ.நா.வில் நேபாள பிரதமர் அழைப்பு!
இமயமலைப் பகுதியில் அதிகரிக்கும் காலநிலை மாற்றப் பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்புடன் நேபாள தலைமையில் 'இமயமலை காலநிலை மாற்ற செயல்திட்டம்' அமைக்கப்பட வேண்டும் என நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப்பின் மிரட்டல் எதிரொலி: பாலகிருஷ்ணா படத்தின் சண்டைக் காட்சியை பகிர்ந்து ஈரான் பதிலடி!!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானை அழித்து விடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பட வீடியோவை வெளியிட்டு ஈரான் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது.
ஷார்ஜாவில் இந்தியர் கொடூர கொலை: 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்... மனைவி, மகன் மாயம்!
ஷார்ஜாவில் இந்தியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே ஆச்சரியப்படும் வகையில் தாக்குதல் நடத்துவோம்: அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதுடன் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சவுதி அரேபியா மற்றும் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு தனது நாட்டின் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் காவல் குடியிருப்பு மசூதியில் கார் குண்டு வெடிப்பு: 21 பேர் பரிதாப பலி; 50 பேர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள காவல் துறை குடியிருப்பு வளாக மசூதி அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடாவா?" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
கனடா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முயன்று வரும் சூழலில், இம்முடிவு தேவையற்ற பகைமையை வளர்க்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நடுவானில் கழன்ற விமானத்தின் டயர்: உடைந்த மேற்கூரையால் பயணிகள் அலறல் - ஈரானில் பரபரப்பு!
ஈரானில் இருந்து புறப்பட்ட போயிங் ரகப் பயணிகள் விமானத்தின் டயர் நடுவானில் திடீரென கழன்று விழுந்ததால் கடுமையான அதிர்வு ஏற்பட்டு, விமானத்தின் உட்புற மேற்கூரை உடைந்து பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பொதுமக்களுக்கு இடையூறு: காவல் துறை கட்டுப்பாட்டால் முதல்வர் விஜய் நிகழ்ச்சி ரத்து!
லண்டனில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, காவல் துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் திடீரென ரத்து செய்யப்பட்டது.
டிரம்பின் விசா கட்டுப்பாட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தடை: இந்திய மாணவர்கள் நிம்மதி!
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் விசா காலத்தைக் குறைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய சட்டத்திற்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இங்கிலாந்து நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு - முதல்வர் விஜய் தலைமையில் ஒப்பந்தம்!
தமிழகத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
