கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை 'டிரம்ப் பெருங்கடல்' (Trump Ocean) என மாற்ற யோசித்ததாகவும், அந்தக் கோரிக்கையைக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்ததாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்க ஏரி' என்று மாற்றுவதற்குக் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து, பெருங்கடல்களின் பெயர்களையும் 'டிரம்ப் பெருங்கடல்' என மாற்ற யோசித்ததாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பெருங்கடல்கள் பல நாடுகளை இணைப்பதால் அதன் பெயரை மாற்றுவது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சுந்தர் பிச்சை எச்சரித்ததாகக் கூறினார்.
கூகுள் நிறுவனத் தலைவரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டதால், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் பேசிய இந்த வினோதமான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதனை மீம்களாகப் பதிவிட்டு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

