» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)
நடிகர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது புதிய அமைப்புகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, பின்னர் உடல்நிலை மற்றும் அன்றைய கள நிலவரங்களைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதற்கிடையே தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், முதலமைச்சர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. இதுகுறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை நேரில் சந்தித்து, தனக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையே எந்தவொரு பிரச்சினையோ அல்லது கருத்து வேறுபாடோ இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். அப்போது அரசியலில் தனக்கும் ரஜினிகாந்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பலர் அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய அமைப்பில் இணையப் போவதாகப் பரவலான செய்திகள் வெளியாகின. அதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸும் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்தத் தொடர் அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி கோ.சம்பத்குமார் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, புதிய அமைப்பிற்கோ அல்லது சங்கங்களுக்கோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)


