» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு

திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறி இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.

இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதில் இருந்த பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது. 

இந்த நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ந் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory