» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கள் 28, ஏப்ரல் 2025 10:42:45 AM (IST)

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.முதல்வர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுககு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.

பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பழைய ஓய்வுதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை, அறிவியல் கல்லூரி பயில ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி வழங்கப்படும்

அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து

vijayanandமே 7, 2025 - 12:50:58 PM | Posted IP 162.1*****

kindly approve to get full pension for 2009 before retirement doctors now they are in 80 years old dont have any income please...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory