» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை: முதல்வர்
திங்கள் 3, மார்ச் 2025 11:37:05 AM (IST)
"எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சதியை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது. தமிழ்நாட்டைத் வஞ்சிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர் பாஜக ஆட்சியாளர்கள். பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் முகவர்களுமே மொழித் திணிப்பை ஆதரிக்கின்றனர். இந்தி திணிப்பை கவர்னர் ஆதரித்து பேசியிருப்பது புதியதல்ல, பொருட்படுத்த வேண்டியதுமல்ல. ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். மத்திய அரசின் துறைகளில் நடப்பது மொழித் திணிப்பு.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் கவர்னர் ரவி.
பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? கவர்னரிடமும் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது.
ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள்.
நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரெயில்வேயிலும் மத்திய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு. ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது?
எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக்களம் காணாமல் இருந்ததில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி., ம.பி., பீகாரில் எத்தனை வட இந்திய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!
வியாழன் 20, பிப்ரவரி 2025 4:07:47 PM (IST)

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி : பிரதமர் மோடி மகிழ்ச்சி
சனி 8, பிப்ரவரி 2025 4:01:15 PM (IST)

தமிழக அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 9:00:02 PM (IST)

தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளிய அதிமுகவை மக்கள் மறக்க மாட்டார்கள் : முதல்வர் ஸ்டாலின்
புதன் 22, ஜனவரி 2025 12:44:40 PM (IST)

மகளிருக்கு உதவித் தொகை: திமுகவை பாஜக பின்பற்றுகிறது - கனிமொழி எம்பி கருத்து!!
சனி 18, ஜனவரி 2025 10:32:37 AM (IST)

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)
