» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தூய்மைப் பணியாளர்கள் குறித்து திமுக அரசுக்கு அக்கறையில்லை : அண்ணாமலை
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:41:57 PM (IST)
தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், தி.மு.க. அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், தூய்மை பணியாளர்களைப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்ய வைத்ததற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம். ஆனால் அதன் பின்னரும், தி.மு.க. அரசு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஊழியர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், தமிழகத்தில், நாட்டிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், தி.மு.க. அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது உயிரிழந்துள்ள ஊழியர் குடும்பத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பின்படி ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!!
வெள்ளி 27, ஜூன் 2025 11:13:59 AM (IST)

2026 தேர்தலுக்கு கற்பனை வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்கள் : முதல்வர் விமர்சனம்!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:57:38 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 19, மே 2025 11:46:16 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)
