» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி : சொந்தமாக கார், வீடு, நிலம் இல்லை!
புதன் 15, மே 2024 12:15:09 PM (IST)
வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்ததாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர மோடி தெரிவித்துள்ளார். அரசியிடம் இருந்து பெறும் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகியவற்றை தனது வருவாய் ஆதாரமாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1.66 கோடிக்கு சொத்துகள் இருந்தன.இது 2019ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாகவும், 2024ஆம் ஆண்டில் ரூ.3.02 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதில், அவரின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் முதலீடுகள் அடங்கும். தற்போது, பிரதமர் மோடியிடம் ரூ.2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் தேசிய சேமிப்புகள் பத்திரங்களில் அவர் ரூ.7.61 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்.
இது தற்போது ரூ.9.12 லட்சமாக உயர்ந்துள்ளது. அவரின் பெயரில் வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடி உள்ளது. அவருக்கு சொந்தமாக கார், வீடு, நிலம் பங்குகள் எதுவும் இல்லை. ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளார். மேலும், தேர்தல் பத்திரத்தில் தனது மனைவியின் பெயர் ஜஷோ தாபென் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை தவிர அவர் வேறு எந்த விவரங்களை குறிப்பிடவில்லை.
மக்கள் கருத்து
உண்மமே 23, 2024 - 06:43:46 AM | Posted IP 172.7*****
தமிழ் நாட்டில் திருட்டு அரசியல்வாதிகள் சொத்து மதிப்பு அதை விட 1000 மடங்கு மேல்.
மேலும் தொடரும் செய்திகள்

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)


yokiyanJul 8, 2024 - 05:08:35 PM | Posted IP 162.1*****