» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்
புதன் 27, மார்ச் 2024 12:47:19 PM (IST)
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கட்சியினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட நாட்களாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்தது.இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் நான் கையொப்பம் இடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்த மனுவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST)

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:12:50 AM (IST)

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

